Header Ads

உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா தொடர்பில் WHO வெளியிட்டுள்ள தகவல்!

 


கடந்த மாதம் தென்னாபிரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்கள் பரவவிவருவது கண்டறியப்பட்டது.

அதில் VOC 202012/01 என அழைக்கப்படும் பிரித்தானிய வகை மாறுபாடு, வைரஸின் முந்தைய வகைகளை விட மிக எளிதாக பரவகூடியது.

70 சதவீதம் வேகமாக பரவும் என்பதையும் நிரூபித்துள்ளது.

கடந்த 1 மாதத்தில் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது மேலும் கடந்த 1 வாரத்தில் மட்டும் புதிதாக 10 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேபோல், தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட 501Y.V2 வகை கொரோனா வைரஸ் கடந்த ஒரே மாதத்தில் 31 நாடுகளுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வகை வைரஸ்களும், இப்போது உலகம் முழுக்க மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா என பல ஆய்வுகள் நடத்தப்பட்டுகின்றது.

மேலும், இந்த மாதம் பிரேசிலில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மூன்றாவது மாறுபாடு இப்போது 8 நாடுகளில் இருப்பதாக WHO தெரிவித்துள்ளது.

B1 எனப்படும் அந்த மாறுபாடு மேலும் தொற்றக்கூடியதாகவும், கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம் என்ற கவலைஅளிப்பதாக WHO கூறியுள்ளது

No comments

Powered by Blogger.