Header Ads

கர்ப்பிணிப்பெண்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்! WHO எச்சரிக்கை



 கர்ப்பிணிப்பெண்கள் மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் மூன்று மில்லியன் கர்ப்பிணிப்பெண்கள் பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

இதுவரை உலகில் எந்த கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும், கர்ப்பிணிகள் மீது சோதனைகள் நடத்தி தனது தடுப்பூசி பாதுகாப்பானது என நிரூபிக்கவில்லை.

ஆகவே, கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிப்பெண்களுக்கு பாதுகாப்பானது என உறுதியளிக்கும் எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்க மருத்துவர்களோ, கர்ப்பிணிப்பெண்களுக்கு தடுப்பூசி போடுவதிலிருந்து விலக்களிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

கர்ப்பிணிப்பெண்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், தங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவேண்டுமா இல்லையா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என தெரிவித்துள்ளனர்.



No comments

Powered by Blogger.