Val-de-Marne : கோர விபத்து! - நான்கு வயது சிறுமி சாவு..!!
வீதி விபத்து ஒன்றில் நான்கு வயது சிறுமி ஒருவர் சாவடைந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலை இவ்விபத்து Boissy-Saint-Léger, Val-de-Marne நகரில் இடம்பெற்றுள்ளது. தனது நான்கு வயது மகளுடன் தாயார் ஒருவர் மகிழுந்தில் N17 வீதியில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். மாலை 7 மணி அளவில், குறித்த மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றுடன் மோதுண்டுள்ளது.
இதில் மகிழுந்து பலத்த சேதமடைந்து நீண்ட தூரம் உருண்டு சென்றுள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் விபத்துக்குள்ளான மகிழுந்தில் இருந்து படுகாயமடைந்த நிலையில், தாயாரையும் அவரது மகளையும் மீட்டனர்.
ஆனால் சிறுமி பலத்த காயமடைந்திருந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. முதலுதவி சிகிச்சைகள் பலனளிக்காமல் சிறுமி சாவடைந்துள்ளார்.
No comments