கொரோனா தொடர்பில் ஜேர்மனி மற்றும் சுவிஸ் அரசு எடுத்துள்ள தீர்மானம்! January 22, 20210
ஜேர்மனியின் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் பலவகை கொரோனா வைரஸ்கள் பரவிவருவதைக் குறிப்பிடும் வகையில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
அது எல்லை கட்டுப்பாடுகளை விதிப்பதைக் குறித்தது அல்ல என மெர்க்கல், ஏற்கனவே அது தொடர்பாக செக் குடியரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நம் நாட்டிலுள்ள கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டுள்ளபோது, நம் நாட்டில் இருக்கும் கொரோனா தொற்றைவிட இருமடங்கு அதிகம் தொற்று பரவல் உடைய நாடுகள் கடைகளைத் திறந்தால் நமக்கு அது நிச்சயம் சிக்கல் என தெரிவித்துள்ளார்.
ட்வீட் ஒன்றை வெளியிட்ட, சுவிஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள Guy Parmelin, தான் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் உரையாடியாகவும் இரு நாடுகளும் இந்த இக்கட்டான சூழலில் உறுதியுடன், நெருக்கமாக செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments