Header Ads

போலி கொரோனா தடுப்பூசி தொடர்பில் எச்சரிக்கும் நிபுணர்கள்



 ஈக்வடார் தலைநகர் குயிட்டோ பகுதியில் இரகசிய சுகாதார மையம் ஒன்றின் செயற்பட்டு வந்துள்ளது.

அந்த சுகாதார மையத்தில் 15 டொலர் கட்டணத்திற்கு போலி கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

போலியான தடுப்பூசி மருந்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட அறிந்த பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டதில் பெண் மருத்துவர் கைதாகியுள்ளார்.

அதில் சமீப காலம் வரை மசாஜ் பார்லராக செயல்பட்டு வந்த குறித்த மையமானது திடீரென்று கொரோனா மருந்துகளுக்கான சுகாதார மையமாக மாறியுள்ளது.

பெண் ஒருவர் முன்னெடுத்து நடத்திவரும் இந்த மையத்தில் இதுவரை 70,000 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு கண்டறிந்துள்ளனர்.

ஈக்வடார் நிர்வாகம் இதுவரை அமெரிக்காவின் பைசர் நிறுவன தடுப்பூசிக்கும் பிரித்தானியாவின் AstraZeneca தடுப்பூசிக்கும் மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

மட்டுமின்றி, நாடு முழுவதும் எதிர்வரும் மார்ச் மாதம் தொடங்கியே பொதுமக்களுக்கு அளிக்க உள்ளது.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மில்லியன் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கவும் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.