கனடாவில் கோர விபத்து! முதியவர் பலி!
கனடாவில் ஒன்றாறியோவில் உள்ள ஹாமில்டன் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
கடந்த 9ஆம் திகதி 80 வயதான முதியவர் ஒருவர் சாலையை கடந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் முதியவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார் ஓட்டுனர் பொலிசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரும் நிலையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது
No comments