Header Ads

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கை அரசின் அதிரடி நடவடிக்கை



 இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமடைகின்றது.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் இன்று முதல் பொது இடங்களில் அன்டிஜன் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி மீன் விற்பனைத்தளங்கள், மரக்கறி விற்பனைத்தளங்கள், வாராந்த சந்தைகள், பொருளாதார மத்திய சந்தைகள் என்பவற்றில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் கொரோனா பரவல் இடங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகத்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நீண்ட தூரப் பேருந்துகளிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.