🔴 கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்..!!
கொரோனா வைரஸ் காரணமாக பதிவான தொற்று மற்றும் சாவு மற்றும் விபரங்கள் வெளியாகியுள்ளன.
நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் 21.703 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். (புதன்கிழமை 25.379 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.) இதனால் மொத்தமாக 2,727,321 பேருக்கு பிரான்சில் தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேவேளை நேற்று ஒரே நாளில் 277 பேர் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 66,841 ஆக உயர்வடைந்துள்ளது.
24 488 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2.573 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments