அவுஸ்திரேலிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட அரசு
அவுஸ்திரேலிய நான்கு மில்லியன் மக்களிற்கு மார்ச் மாத இறுதிக்குள் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் திட்டம் குறித்து அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
பெப்ரவரி நடுப்பகுதியில் கொரோனா தொற்று மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகலாம் என பிரதர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு மருந்தினை வழங்கும் திட்டம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலில் பணியாற்றுபவர்களிற்கும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கையாள்பவர்களிற்கும் சுகாதார பணியாளர்களிற்கும் முதியோர் மற்றும் அங்கவீனர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் சிறுவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து குறைவு என்பதால் அவர்களிற்கு இறுதியாகவே மருந்து வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பல கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு அனுமதி வழங்கும் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மருந்து விநியோகத்தினை எப்போது ஆரம்பிப்பது என்ற துல்லியமான திகதியை தன்னால் தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி நடுப்பகுதியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாளர்களிற்கு மருந்தினை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
No comments