Header Ads

பல்லாயிரக்கணக்கானவர்களிற்கு இன்று கொரோனத் தடுப்பு ஊசி -சுகாதார அமைச்கம்!

 


இன்று பல்லாயிரக்கணக்கானவர்களிற்குக் கொரோனத் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளதாக பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

 
ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கொரோனத் தடுப்பூசிகள் பிரான்சில் மிக விரைவாக வழங்கப்படுவதோடு, மக்களிற்கு விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 
மருத்துவத் துறையினர்க்கான தடுப்பு ஊசிகள் மிக விரைவாகப் போடப்படுகின்றன.
 
 
இன்று பிரான்சின் பல வைத்தியசாலைகளில் மருத்துவத் துறையினர்க்கான தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வரும் நிலையில், இன்று பரிசில் உள்ள Hôtel-Dieu வைத்தியசாலைக்கு, சுகாதார அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்ட போது, பல்லாயிரக்கணக்கான கொரோனாத் தடுப்பு ஊசிகள் இன்று போடப்படும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
 
கொரோனத் தடுப்பு ஊசியானது, பிரான்சிற்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் எனவும், நத்தாரிற்கும் புதுவருடத்திற்கும் இடையில் 500.000 தடுப்பு ஊசி அலகுகள் பிரான்சிற்குக் கிடைத்தது என்றும், அடுத்த வாரத்திற்குள் மேலும் 580.000 அலகுகள் விநியோகம் செய்யப்படும் எனவும், மிகவும் வேகமாக, தடுப்பு ஊசிகள் போடப்படுத் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.