🔴 கொரோனா வைரஸ் : தற்போதைய தொற்று, சாவு தடுப்பூசி நிலவரம்...!!
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பதிவாகியுள்ள தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ!
தொற்று!
கடந்த 24 மணிநேரத்தில் 23,924 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதானால் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,035,181 ஆக அதிகரித்துள்ளது. தொற்று வீதம் 7.1% ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனை!
கடந்த 7 நாட்களில் 10.915 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 1.657 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாவு!
கடந்த 24 மணிநேரத்தில் 321 பேர் சாவடைந்துள்ளனர். இதானால் மொத்தமாக சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 72.877 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 50.901 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.
தடுப்பூசி!
நேற்று ஒரே நாளில் 45.581 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக ஒரு இலட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், நேற்றைய நாளில் பாதியாக இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணம் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது. இதுவரை (சனிக்கிழமை மாலை 4 மணி வரையான நிலவரம்) 1,008,720 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
No comments