யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையம்!
யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் தூர இடங்களுக்கான பேருந்து நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்படுள்ள நெடுந்தூர பேருந்து நிலையம் எதிர்வரும் (27) புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் இதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் இந்த பேருந்து நிலையத்திற்கான வேலைப்பாடுகள் நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில் இதன் வேலைப்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையிலேயே இந்த திறப்புவிழா முன்னெடுக்கப்படவுள்ளது.
இனிமேல் தூர இடங்களுக்கான பேருந்துகள் இங்கிருந்துதான் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments