Header Ads

இந்தியாவிலும் தோன்றிய மர்ம உலோகத்தூண்



 உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த மர்மமான உலோகத்தூண் தோன்றியுள்ளது.

திடீரென தோன்றிய ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டது.

அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் இந்த தூண் காணப்பட்டுள்ளது.

உலோக அமைப்பு தரையில் அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.

ஆனால் அதன் அடிவாரத்தில் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

நியூ மெக்சிகோவில் உள்ள ‘தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட்’ என்ற கலைக் குழு, உட்டாவில் தூணை வைத்ததாக கூறியது.

ஆனால் மற்ற நாடுகளில் தாங்கள் நிறுவவில்லை என தெரிவித்துள்ளது.

உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள இந்த மர்ம தூண்களை நிறுவியது யார் என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.

No comments

Powered by Blogger.