Header Ads

மூன்றாவது முறையாக உருமாற்றம் பெற்ற கொரோனா! எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்



 உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக கொரோனா தொற்று காணப்படுகின்றது.

அதனை தொடர்ந்து பிரித்தானியாவில் புதிய வகை உருமாறிய் கொரோனா கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் அது அதிதீவிரமாக பரவக்கூடியதாக அடையாளம் காணப்பட்டது.

தற்போது பிரித்தானியாவின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் பிரேசில் நாட்டில் தற்போது மூன்றாவது முறையாக உருமாற்றம் கண்டுள்ள கொரோனா தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் நீல் பெர்குசன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போது புழக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்தும் பிரேசில் கொரோனாவால் செயல் திறனற்று போகும்.

ஏற்கனவே ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இதனால் வளர்த்துக் கொள்ளப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியானது புதிய பிரேசில் கொரோனாவால் தகர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்கு வரும் விமான சேவைகளை மொத்தமாக நிறுத்தியுள்ள போதிலும் அதனை தடுத்துவிட முடியும் என கண்டிப்பாக கருத முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரேசிலில் உருமாற்றம் பெற்ற கொரோனா மிகவும் அபாயம் மிக்கது என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.