இலங்கையில் வங்கியொன்றை கொள்ளையிட முயன்ற விமானப்படை உறுப்பினர் கைது..!
இலங்கையில் அம்பலாங்கொடை – உஸ்முதுலாவ கிராமிய வங்கியில் கொள்ளையிட்டு தப்பி சென்ற விமானப்படை உறுப்பினர் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைக்குண்டு ஒன்றைய காண்பித்து கிராமிய வங்கியின் முகாமையாரை அச்சுறுத்தி அங்கிருந்த ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் போலி துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 47 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments