இலங்கைக்கு கிடைக்கவுள்ள கொரோனா தடுப்பூசி தொடர்பில் தகவல் வெளியானது!
இலங்கை உள்ளிட்ட சில அண்டை நாடுகளுக்கு சுமார் 20 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்காக, தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இரண்டு நிறுவனங்களிடம் இருந்து, இந்திய அரச நிறுவனம் ஒன்று தடுப்பூசிகளை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சீஷெய்ல்ஸ் மற்றும் மொரிஸியஸ் முதலான நாடுகளும் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டமானது, இன்னும் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
No comments