மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி!
ஹட்டன் நகரத்தில் அமைந்துள்ள பிரபலமான பாடசாலை விடுதியில் 20 மாணவர்களுடன் மேலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த விடுதியில் கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட10ஆம் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகள் ஹட்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டிக்கோயா நகர சபையில் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாணவிகளில் ஒருவர் இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர் என தெரியவந்துள்ளது.
அந்த மாணவி மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மற்றைய மாணவி மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் 12 நாட்களுக்கு முன்னர் விடுதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டு மாணவிகளும் 18 மற்றும் 19ஆம் திகதிகள் பாடசாலைக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விடுதி முழுவதும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு அருகில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments