Header Ads

வீட்டில் தயாரிக்கும் முகக்கவசங்கள் ஆபத்தானவை!! பயன்படுத்த வேண்டாம்!!


 

இணையத்தளங்கள் மற்றும் யூரியூப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களைப் பார்த்து, தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை (masques artisanaux) அணிவதைத் தவிர்க்குமாறு பிரான்சின் சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

 
 
கொரோனாக் கிருமிகளை வடிகட்டும் தன்மை இவற்றிற்கு மிகக் குறைவென்றும், புதிய பிரித்தானிய, மற்றும் தென்னாபிரிக்க வைரஸ் போன்றவற்றின் அதியுச்சத் தொற்றுத் தன்மையை இவை வடிகட்டத் தவறுவதால், இவை ஆபத்தானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
சத்திர சிகிச்சை முகக்கவசங்கள், அல்லது, அரசால் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனையாகும் முகக்கவசங்களை ( catégorie 1), மற்றம்  FFP2 ரக முகக்கவசங்களை உபயோகிப்பதே சிறந்தது எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
வருமானம் குறைந்த கும்பங்களிற்கு, மூன்றாவது முறையாக, மீண்டும் முக்கக்வசங்கள் அவர்களது தபால் பெட்டிகளில் போடும் நடவடிக்கை உடனயடியாக மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.