Header Ads

மூன்றாவது பொதுமுடக்கம் : முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் அரசாங்கம் !!

 


'மூன்றாவது பொதுமுடக்கம்' தொடர்பிலான விவாதங்கள் இவ்வாரம் தொடக்கம் முதலே பேசுபொருளாக இருந்து வந்த நிலையில், அது தொடர்பில் ஓர் தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாமல் அரசாங்கம் தடுமாறுவதாகவே காணமுடிகின்றது.
குறிப்பாக அரசாங்கத்துக்கு உள்ள அரசியல் நெருக்கடி ஒருபுறமெனில், மருத்துவதுறையினரின் நெருக்கடி மறுபுறமென, இரண்டு பக்க நெருக்கடிக்குள் மாட்டிக் அரசாங்கம் மாட்டிக் கொண்டுள்ள நிலையில், முடிவினை எடுக்க முடியாத கட்டத்துக்குள் தடுமாற்ற நிலையில் காணப்படுகின்றது.
தீவிர சிகிச்சை பிரிவிலும், மருத்துவமனைகளிலும் அனுமதிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று புதன்கிழமை அதிபர் மாளிகையில் இடம்பெற இருக்கின்ற ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து மூன்றாவது பொதுமுடக்கத்துக்கான அறிவிப்பினை அதிபர் ஏமானுவல் மக்ரோன் வெளியிடுவார் என கடந்த ஞாயிறன்று செய்திகள் தெரிவித்திருந்தன.
இருப்பினும் அதிபர் இன்று புதன்கிழமை உரையாற்ற மாட்டார் என அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்ததோடு, தற்போது நடைமுறையல் உள்ள மாலை 18 மணிக்கு பின்னரான ஊரடங்கு சட்டத்தின் விளைவுகள் குறித்து ஆராய்ந்த பின்னரே முடிவுக்கு செல்லலாம் என்ற நிலைப்பாட்டில் அதிபர் இருப்பதாக தெரியவருகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகின்ற வளஅறிஞர் குழுவின் தலைவர் Jean-François Delfraissy. நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகமொன்று கருத்து தெரிவிக்கையில், ' உடனடி பொதுமுடக்கத்துக்கான பாரிய நெருக்கடி காணப்படவில்லை' என தெரிவித்துள்ளதோடு, தற்போதுள்ள ஊரடங்கு சட்டத்தின் விளைவுகள் குறித்து மதிப்பீடு அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு செய்ய பின்னரே முடிவினை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாத முதல் பொதுமுடக்க காலத்தில் 85 வீதமும், இரண்டாம் பொதுடக்க காலத்தில் 65 வீதமும் என்ற அளவிலேயே சுகாதாரக்கட்டுப்பாட்டுக்குள் மக்கள் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுள்ளி புள்ளிவிபரம் ஒன்று, மூன்றாவது பொதுமுடக்கம் வரும் எனில் எத்தனை வீதம் பொதுமக்களால் கடைப்பிடிக்கபடும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
குறிப்பாக பொதுமுடக்கத்துக்கு எதிரான ஓர் பொதுமனநிலை மக்களிடத்தில் வளர்ந்து வருவது என்பது அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்பட்டு வருவதோடு, அது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாக மற்றைய சில நாடுகளைப் போல் பிரான்சிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.
கொரோனாவின் இக்காலத்தில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகின்ற வளஅறிஞர் குழுவின் பரிந்துரைகளை முன்வைத்து பொதுமுடக்கம், சுகாதாரக்கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் அரசாங்கத்தினால், அரசியல்ரீதியாக ஓர் தீர்க்கமான தன் முடிவினை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எதுவாயினும் பிரித்தானியா, தென்னாபிரிக்கா, பிறேசில் என்று கொரோனா நாளுக்கு தன்னை உருமாறிக் கொண்டு பரவிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
thaaiman news team




No comments

Powered by Blogger.