பிரான்சில் கடும் பனிப்பொழிவு! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரான்சில் கடும் பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சின் எட்டு மாவட்டங்கள் உட்பட, மேலும் ஐந்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள சாலைகளில் பனிமூடிக் கிடப்பதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மீட்புப் படையினர் இயந்திரம் மூலம் பனிகளை அகற்றி வருகின்றனர்.
இந்த கால கட்டத்தில் கொரோனா தொற்று அதிக தீவிரமடையும் அபாயம் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிரான்சில் வரும் வாரம் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
No comments