லண்டனில் மருத்துவ ஊழியர் என வீட்டுகளுக்கு வரும் நபர் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு
தெற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் 92 வயதான பெண்மணி ஒருவரின் வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார்.
அப்போது அந்த நபர் மூதாட்டியிடம் நான் NHS ஊழியர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்துவதற்காக வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி வீட்டின் கதவை திறந்த மூதாட்டி அந்த நபரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து ஊசியை செலுத்தி அந்த நபர் அதற்காக 160 டாலர் பணத்தையும் வாங்கியுள்ளார்.
அதன் பின்பு அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தான் அந்த நபர் மோசடி செய்து போலியான ஊசியை செலுத்தியது மூதாட்டிக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, மூதாட்டிக்கு எந்த ஊசியை அந்த மர்ம நபர் போடுள்ளார் என்பது பற்றி தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
ஆனால் மூதாட்டிக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் மோசமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
மேலும் இந்த மோசடி நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ஏனெனில் அவர் பண மோசடி செய்வது மட்டுமின்றி மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
இதுதொடர்பாக அந்த நபரின் புகைப்படத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து யாருக்கேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments