இலங்கையர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல்!
இலங்கையில் வார இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் ஆலோசனைகளை கடுமையாக பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றியும், சுகாதாரத்துறையினரின் ஆலோசனையின் படியும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேல்மாகாணத்தில் இன்று மற்றும் நாளை பல சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக அரச மற்றும் தனியார்துறைசார் நிறுவனங்கள் இயங்குகின்றனவா என்பது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிபவர்களுக்கான ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
No comments