🔴 கொரோனா தடுப்பூசிகள்! - தற்போதைய நிலவரம்..!!
கொரோனா தடுப்பூகள் தட்டுப்பாடு நிலவும் அதேவேளை, தடுப்பூசிகள் போடப்படும் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரையான நிலவரம் இதோ:
’நாள் ஒன்றில் போடப்பட்ட அதிகபட்ச கொரோனா தடுப்பூசிகள்’ நேற்று பதிவானது. நேற்றைய நாளில் 139.572 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதானால் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 963.139 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டவர்கள் அனைவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
நேற்றைய நாளில் 323 பேர் சாவடைந்த நிலையில், இதுவரை 72.647 பேர் மொத்தமாக சாவடைந்துள்ளனர். அவர்களில் 9 பேர் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் ஆவர். ஆனால் தடுப்பூசியாலேயே மரணம் சம்பவித்துள்ளது என்பதற்குரிய எந்த ஆதாரங்களும் இல்லை என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
No comments