உள்நாட்டு உற்பத்திகள் தொடர்பில் பிரதமரின் வேண்டுகோள்
இலங்கையில் பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் பாதணி தொழிற்சாலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சில விடயங்களை குறிப்பிட்டு கூறியுள்ளார்.
அதில் அவர் எமது நாட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையர்களான அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
தற்போதைய கொவிட்19 பரவல் நெருக்கடி உலக நாடுகளை போன்று இலங்கை மக்களினது வாழ்வாதாரத்திலும் கடும் தாக்கத்தினை ஏற்பட்டுத்தியுள்ளால் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளோம்.
தற்போது ஆரம்பிக்கப்படும் இந்த பாதணி தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் பாதணிகளை உள்ளுர் சந்தையில் 30 சதவீம் விலை குறைவாக பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
No comments