Header Ads

🔴 விசேட செய்தி! - பிரான்சுக்குள் நுழைவதற்கு புதிய பயணக் கட்டுப்பாடு!!

 


கடந்த திங்கட்கிழமையில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்படாத நாடுகளில் இருந்து பிரான்சுக்குள் நுழைய கொரோனா பரிசோதனைகள் முடிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றுமொரு புதிய பயணக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்து உட்பட்ட நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வரவும் இந்த கொரோனா பரிசோதனைகள் முடிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 72 மணிநேரத்துக்கு உட்பட்ட PCR (கொரோனா பரிசோதனை) முடிவுகளாகவும், அதில் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டிருக்கவும் வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மாநாட்டில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதனை அறிவித்தார். 

No comments

Powered by Blogger.