Header Ads

பாரிய நஷ்டத்தைச் சந்தித்த பரிஸ் விமான நிலையங்கள்..!!

 


கடந்த 2020 ஆம் ஆண்டில் பரிஸ் விமான நிலையங்கள் பாரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. 

 
கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டும், பல மாதங்கள் விமான நிலையங்கள் மூடப்பட்டும் இருந்தமை நீங்கள் அறிந்ததே. கடந்தவருடத்தில் பரிஸ் விமான நிலையங்கள் 69.4% வீதமான பயணிகள் வரத்தை இழந்துள்ளது. 
 
குறிப்பாக சாள்-து-கோல் சர்வதேச விமான நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் 70.8% வீத பயணிகள் வரத்தை இழந்திருந்தது. அவ்வருடத்தில் வெறுமனே 22.3 மில்லியன் பயணிகளை மாத்திரமே சந்தித்திருந்து. 
 
 
ஓர்லி சர்வதேச விமான நிலையம் 66.1% வீத பயணிகள் வரத்தை இழந்திருந்தது. வெறுமனே 10.8 மில்லியன் பயணிகள் மாத்திரமே இந்த விமான நிலையம் ஊடாக பயணித்திருந்தனர்.
 
*உலகம் முழுவதும் நிலவிய சுகாதார நிலமைகள் காரணமாக விமான நிலைய சேவைகளே பெரிதும் முடக்கபட்டிருந்தன. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 60% வீதமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக  International Civil Aviation Organization (ICAO) நிறுவனம் அறிவித்துள்ளது.
 

No comments

Powered by Blogger.