உருமாறிய கொரோனாவிற்கு எதிராக தடுப்புமருந்து கண்டுப்பிடிப்பு
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில்புதிய உருமாறிய கொரோனா வைரஸூக்கு எதிராக நோவாவேக்ஸ் தடுப்புமருந்து 89.3 சதவீதம் செயற்திறனை கொண்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
18 முதல் 84 வயது வரையிலான பல்வேறு வயதுடையவர்கள் அடங்கிய, 15,000 பேர் கலந்து கொண்ட மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா வைரஸுக்கு எதிராக நோவாவேக்ஸ் தடுப்பூசி 89.3 சதவீதம் செயற்திறனைக் காட்டியிருக்கிறது.
இதில் 27 சதவீதத்தினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என நோவாவேக்ஸ் கூறியுள்ளது.
கொரோனா வைரஸின் தென்னாபிரிக்கத் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பங்கெடுத்த பரிசோதனையில், ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்படாதவர்களிடம் 60 சதவீதம் செயற்திறனைக் காட்டியிருக்கிறது.
நோவாவேக்ஸ் மருந்துக்கு பிரித்தானியாவின் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்கு கட்டுப்பாட்டு முகாமை அனுமதி வழங்கிய பின் அதன் உற்பத்தி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும்.
ஏற்கனவே பிரித்தானியா, அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்து, ஃபைஸர்- பயோஎன்டெக், அமெரிக்காவின் மொடர்னா என இதுவரை மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments