Header Ads

இலங்கை நாடாளுமன்றத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்!

 


இலங்கையில் நாடாளுமன்ற வளாகத்தில் வாராந்தம் எழுமாறாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் மற்றும் நடைபெறாத தினங்களிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த பரிசோதனையில் பங்கேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற பணியாளர்களுககும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்திக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

No comments

Powered by Blogger.