Header Ads

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்



டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான உயர்வு, எலான் மஸ்க்கை அமேசன் நிறுவனத்தை விடவும் முந்திக்கொண்டு பணக்காரராக உயர்த்தியது.

இந்த தகவல்கள் உலகின் 500 செல்வந்தர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ள ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த பொறியாளரான எலான் மஸ்கின் நிகர மதிப்பு நியூயோர்க்கில் வியாழக்கிழமை காலை 10:15 மணிக்கு 188.5 பில்லியன் டொலராக இருந்தது.
இது அக்டோபர் 2017 முதல் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை வகித்துவரும் பெசோஸை விட 1.5 பில்லியன் டொலர் அதிகம்.

டெஸ்லாவின் பங்கு விலையில் இல்லாத வகையில் அதிவேக வளர்ச்சியில் உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743% உயர்ந்தது.

அமேசன் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

 

No comments

Powered by Blogger.