கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து
இந்தியாவின் புனே பகுதியில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கும் சீரம் நிறுவகத்தில் நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.
தடுப்பூசி தயாரிக்கும் பிரிவிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக இந்திய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் எந்த தடையும் இல்லை என அந்த நிறுவகம் அறிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவத்தில் மரணித்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இந்திய ரூபா வழங்குவதாக சீரம் நிறுவகம் அறிவித்துள்ளது.
No comments