Header Ads

மூட நம்பிக்கையால் மகள்களை கொலை செய்த பெற்றோர்! என்ன நடந்தது?

 


ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி நகரில் தங்கள் மகள்களை கொலை செய்த குற்றத்தில் தொடர்புடையதாக பெற்றோரை கைது செய்துள்ளனர் போலீசார். ஞாயிறன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். என்ன நடந்தது?

கொலையான பெண்களின் தந்தை புருஷோத்தமன் நாயுடு அரசு பெண்கள் கல்லூரியின் துனை முதல்வராக உள்ளார். அவரின் மனைவியும் கொலையுண்ட பெண்களின் தாயுமான பத்மஜா தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார்.

இவரது இருமகள்கள் தான் அலெக்யா மற்றும் சாய் திவ்யா. 27 வயதான அலெக்யா தன் முதுகலை நிர்வாக மேலாண்மைப் படிப்பை போபாலில் ஒரு பிரபல கல்லூரியில் படித்து முடித்துவிட்டார். 22 வயதான சாய் திவ்யா இளங்கலை நிர்வாக மேலாண்மையைப் படித்தவர். அதோடு ஏ ஆர் ரஹ்மானின் மும்பை இசைப் பள்ளியிலும் படித்திருக்கிறார். இவர்களது வீடு சித்தூர் மாவட்டத்தில் சிவநகர் பகுதியில் இருக்கிறது. இவர்கள் ஞாயிறன்று பூஜை செய்து, இளைய மகளை சூலத்தாலும், மூத்த மகளை உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தும் தம்புள் சாதனத்தைப் பயன்படுத்தியும் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரிடம் புருஷோத்தமன் நாயுடு கூற அவர் வீட்டிற்கு வந்து பார்த்து பின் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தற்போது மதனப்பள்ளி டிஎஸ்பி இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வருகிறார்.

வீட்டில் விசாரணை
தனது மகள்களை புருஷோத்தமன் நாயுடுவும், பத்மஜாவும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் மனநலம் சற்று வித்தியாசமாக உள்ளதாக போலீசார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டிலேயே விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பெற்றோர் தங்களின் மீது அதிக அழுத்தம் தர வேண்டுடாம் என போலீசாரிடம் கோரியுள்ளனர். இதனால் பெற்றோர் விசாரணையில் ஒத்துழைக்க சில உறவினர்களை வீட்டிற்குள் அனுமதித்துள்ளனர் போலீசார். மேலும் மனநல மருத்துவரின் உதவியை நாட போவதாக மதனப்பள்ளி போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர். மேலும் அவர்களின் வீட்டில் சில வித்தியாசமான புகைப்படங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவரங்கள் தெரியவரும்
முதற்கட்ட விசாரணையில் “பெற்றோர் இருவருமே மூடநம்பிக்கைகளைக் கொண்டவர்களாக இருந்தனர். பெண்களின் உடலை மேலும் ஒரு நாளுக்கு அதே இடத்தில் வைக்குமாறு அவர்கள் கூறினர். அவர்கள் நன்கு படித்தவர்களாக உள்ளனர். ஆரம்பக் கட்ட விசாரணையில் தம்பிளை கொண்டு அடித்து உள்ளனர் என்பது தெரிகிறது,” என டிஎஸ்பி ரவி மனோகர் சாரி தெரிவித்துள்ளார்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, உடலை அப்புறப்படுத்தி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த கொலை தொடர்பாக ஒரு வழக்கையும் பதிவு செய்திருக்கிறார்கள் காவல் துறையினர். இந்த வழக்கில் மற்றொரு முக்கிய ஆதாரமாக உயிரிழந்த சாய் திவ்யாவின் சமூக ஊடக பதிவை கருதிகின்றனர். அவர் சமூக ஊடகத்தில் “ஷிவா வந்துவிட்டார்..வேலை முடிந்தது” என பதிவிட்டுள்ளார். அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளும் கைப்பற்றப்பட்டு விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


No comments

Powered by Blogger.