Header Ads

சுவிஸில் இனங்காணப்பட்ட தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ்



 சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் தென்னாப்பிரிக்க வகை திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

St Moritz என்னும் அந்த ரிசார்ட்டில், ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த தென்னாப்பிரிக்க வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இரண்டு ஆடம்பர ஹொட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

உள்ளூர் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இப்போது அனைவரும் அனைத்து இடங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ், ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரஸைவிட அதிக அபாயமுள்ளது அல்ல என்ற போதிலும் அதைவிட எளிதில் தொற்றக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.