Header Ads

உருமாறிய கொரோனா தொற்றால் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

 


ஒரு வருட காலமாக உலக நாடுகளை கொரேனா தொற்றானது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றமாக கொவிட் டன் என்ற வைரஸ் பரவி வருகின்றது.

இந்த உருமாற்றம் பெற்ற வைரஸானது தற்போது வேகமாக மக்களிடையே பரவக்கூடிய ஆற்றல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரான தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் மூலம் மனிதர்களின் நாக்கில் பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாக்கில் சிகப்பு நிறத்தில் புள்ளிகள் அல்லது தழும்புகள் நோய் அறிகுறிகளாக பார்க்க முடியும்.

நாக்கு முழுவதும் இவ்வாறான அறிகுறி காணப்பட்டால் அதனை கொரோனா தொற்று என சந்தேகிக்க முடியும்.

அதற்கமைய PCR பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் கொரோனா தொற்றினை உறுதி செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.