பொலிவியாவில் பெய்த கனமழை! ஐவர் மாயம்
பொலிவியாவின் கோச்சபம்பா பகுதியில் கனமழை பெய்தது.
டகீனா நதி நிரம்பி வழிந்தமையால் வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஐவர் மாயமாகியுள்ளனர்
இந்நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தங்களின் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
அதன்படி இதுவரையில் அங்கு 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments