Header Ads

பிரித்தானியாவில் பாடசாலைகள் திறப்பது தொடர்பில் அரசின் தீர்மானம்!



 பிரித்தானியாவில் தொடக்கநிலை மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் ஜனவரி முதல் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

வீட்டில் மடிக்கணினி வசதி இல்லாதவர்கள் அல்லது படிக்க அமைதியான இடம் இல்லாதவர்கள், சுகாதார பணி உள்ளிட்ட குறிப்பிட்ட முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகள் என பல பாடசாலை குழந்தைகள் இன்னும் ஒவ்வொரு நாளும் பள்ளி செல்ல வேண்டியுள்ளது.

பள்ளிகள், மாணவர்களின் வயதுக்கு ஏற்ப ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து மணிநேர கற்பித்தல் வழங்க வேண்டும் என்று அரசு கூறுகிறது.

இதற்கிடையில்,பெப்ரவரி நடுப்பகுதியில் சில லக்கடவுன் தளர்வுகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் பள்ளிகள் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் திறக்கப்படும் என்பதற்கு இப்போது உத்தரவாதம் இல்லை என பிரித்தானிய கல்வித்துறை செயலாளர் கவின் வில்லியம்சன் கூறியுள்ளார்.

இந்நிலையில், பள்ளிகளை மீண்டும் எப்போது திறப்பது என்பது குறித்து முடிவெடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எதிர் தரப்பு கட்சிகள், பிரித்தானியாவில் அனைத்து எல்லைகளையும் அடைத்து, ஆசிரியர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தி, பள்ளிகளை விரைவாக திறக்கவேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை விடவும் பிள்ளைகளின் கல்வி மிக அவசியமானது என்றும் எதிர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

No comments

Powered by Blogger.