Header Ads

சிறுமிகளை பயன்படுத்தி திருட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்ட பெற்றோர்

 


இலங்கையில் அனுராதபுரத்தில் நகை கடையில் தனது சிறிய மகளை பயன்படுத்தி திருட்டு நடவடிக்கையில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பெற்றோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அனுராதபுரம் தலைமை குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நகை கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வைத்ததையடுத்து 8 வயதுடைய சிறுமி ஒருவரால் தங்க மோதிரம் ஒன்றை திருடும் காட்சி CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

பாடசாலை வயதுடைய குறித்த மாணவியும் 4 வயதுடைய சிறுமியும் பெற்றோருடன் குறித்த நகை கடைக்கு சென்றுள்ளனர்.

இதன் போது ஊழியரை திசை திருப்பிய பெற்றோர் சிறுமிகளை திருட வைத்துள்ள காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் நகை கடையின் கொடுக்கல் வாங்கல் நிறைவு செய்து நகைகளை கணக்கிடும் போது தங்க மோதிரம் ஒன்று திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த குடும்பம் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் இன்னமும் கண்டுபிடிக்கமுடியாத நிலையில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.