Header Ads

🔴 ஆறு மணி ஊரடங்கு பயனளிக்கவில்லை! - இறுக்கமான ஊரடங்கிற்கு திட்டம்..!!

 


தினமும் நடைமுறைக்கு வரும் 6 மணி ஊரடங்கு பயனளிக்கவில்லை என அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

 
இன்று புதன்கிழமை அரச பேச்சாளர் Gabriel Attal தெரிவிக்கையில், << மாலை 6 மணி முதலான ஊரடங்கு எதிர்பார்த்த முடிவை தரவில்லை. அது பயனளிக்கவில்லை. குறிப்பிடத்தக்க அளவு கொரோனா தொற்றை குறைக்கவில்லை.>> என தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொரோனா தொற்று பரவிக்கொண்டே உள்ளது. இது தொடர்பான படிப்பினையை நாம் ஆராய்ந்துள்ளோம். இதனால் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளே தேவைப்படுகின்றது என தெரிவித்தார். 
 
முன்னதாக, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மூன்றாம் கட்ட உள்ளிருப்பு தொடர்பாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘ஊரடங்கு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதுமே உள்ளிருப்பு தொடர்பாக அறிவிக்கமுடியும்!’ எனவும் மக்ரோன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.