சுவிட்சர்லாந்தில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்!
இறந்த பறவையைக் கண்டால், அதைத் தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் இருந்து பறவைகள் இடம்பெயர்வு காரணமாக வழித்தடங்களில் சில இறந்த காட்டு பறவைகளில் பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் அவை மனிதர்களுக்கு தொற்றும் தன்மை கொண்டது அல்ல என்ற போதிலும் உள்நாட்டு வளர்ப்புப் பறவைகளில் தொற்றும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இறந்த பறவைகளை பொதுமக்கள் காண நேர்ந்தால், அவைகளை அப்புறப்படுத்தவோ தொடவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு சுவிட்சர்லாந்தில் பறவை காய்ச்சல் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
கோழி இறைச்சிகள் மற்றும் முட்டை போன்ற தயாரிப்புகளை இன்னும் பாதுகாப்பாக உட்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments