எங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு - டுவிட்டர் செய்தியில் எமானுவல் மக்ரோன்!!
எங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒன்றாக இணைந்து கொரோனாப் பரவலைத் தடுப்போம்" என பிரான்சின் ஜனாதிபதி தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் வெளியிட்ட அறிக்கைக்குத் துணையாக, எமானுவல் மக்ரோன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
பிரான்சின் எல்லை நாடுகளும், பல ஐரோப்பிய நாடுகளும், உள்ளிருப்பை அறிவித்து, மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்திருக்கும் நேரம், எமானுவல் மக்ரோன் வெறும் ஊரடங்கால் வைரசினைக் கட்டுப்படுத்தி விடலாம் என நினைக்கின்றார்.
இவரது முடிவு, மருத்துவத் துறையினரின் பெரும் விமர்சனத்திற்கும் கோபத்திற்கும் உள்ளாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளாந்தம் பெரும் தொற்றும், பிரித்தானிய வைரசின் பரவலும், பிரான்சினைப் பெரும் ஆபத்திற்குள் தள்ளி உள்ளது.
No comments