Header Ads

கொரோனா விதிகளை மீறுவோருக்கு எதிராக ஜேர்மனி அரசு எடுத்துள்ள முடிவு



 ஜேர்மனியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், புதிய உருமாற்றம் பெற்ற பிரித்தானிய வகை கொரோனாவும் பரவுவதை தவிர்க்க அந்நாடு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.

Saxony மாகாணத்தில் தனிமைப்படுத்தலை மீறுவோரை அகதிகள் முகாம் ஒன்றில் அடைக்க முடிவு செய்துள்ளது.

மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்தல் முதலான கொரோனா விதிகளை மீறுவோர் மட்டும் இந்த அகதிகள் முகாமில் அடைக்கப்படுவார்கள்.

மேலும் Baden-Württemberg, கொரோனா விதிகளை மீறுவோரை அடைக்க இரண்டு மருத்துவமனை அறைகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அவற்றை பொலிசார் கண்காணிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Brandenburgஇல் அகதிகள் முகாம் ஒன்றின் ஒரு பகுதி விதிகளை மீறுவோருக்காக ஒதுக்கப்படும் நிலையில், Schleswig-Holsteinஇல் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஒன்றின் ஒரு பகுதி விதி மீறலில் ஈடுபடுவோருக்காக ஒதுக்கப்பட உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேல், ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், அனைத்து பொது போக்குவரத்தையும் ரத்து செய்யவும்,

மெகா பொது முடக்கம் ஒன்றை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.