அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம்
அமெரிக்காவில் பியோரியா நகரை சேர்ந்தவர் மோனா எல்லீசன் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் அவர் குறித்து எந்தவொரு தகவலும் தெரியாமல் இருந்தது.
மோனாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் அங்குள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி வீடுகள் அமைந்துள்ள இடத்துக்கு பின்பக்கத்தில் உள்ள மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் மோனாவை பொலிசார் சடலமாக கண்டெடுத்துள்ளனர்.
அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மோனாவின் மரணத்தை மர்ம மரணமாக கருதும் பொலிசார் இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
No comments