Header Ads

பிரித்தானியாவில் தீவிரமடையும் கொரோனா…. எச்சரிக்கும் பிரதமர் ஜோன்சன்



பிரித்தானியாவில் ஊரடங்கு அமுலில் இருக்கும்நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,820 என புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் தொடர்பில் பிரதமர் ஜோன்சன், உருமாறிய வீரியம் மிக்க புதிய கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியாவில் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடியவர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை நாடு முழுவதும் 4.6 மில்லியன் மக்கள் கொரோனா தடுப்பூசிக்கான தங்கள் முதல் மருந்தை எடுத்துக் கொண்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி மாதம் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார ஊழியர்கள், சமூக நல ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு தங்கள் முதல் டோஸ் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.