Header Ads

எச்சரிக்கை - இல்-து-பிரான்சில் அதிகரித்துள்ள பிரித்தானிய வைரஸ்!!



 கடந்த இரண்டு வாரங்களாக, இல்-து-பிரான்சில் உறுதி செய்யப்படும் அன்றாடக் கொரோனாத் தொற்றுக்களில் 10% இற்கும் அதிகமாக பிரித்தானிய வைரசான VOC 202012/01 இன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 
பரிசின் அரசாங்க வைத்தியசசாலைகளான  AP-HP (Assistance publique-Hôpitaux de Paris) யின் மருத்துவர்கள், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். இதனால் எதிர்வரும் வாரங்களில் இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்றின் எண்ணிக்கையும், வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதியுச்சமாகச் செல்ல உள்ளது எனவும் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.