Header Ads

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் - பரிஸ் காவற்துறை எச்சரிக்கை!!

 


பரிசின் கடுமையான பனிப்பொழிவை அடுத்து, தேவையற்ற பயணங்கள், மற்றும் பரிசிற்குள் வருவதையும், தவிர்க்கும் படி பரிசின் காவற்துறைத் தலைமையகம் மற்றும் மாவட்ட ஆணையம் (préfecture) எச்சரித்துள்ளது.

 
கடுமையான பனிவீழ்ச்சியினால், பரிஸ் மாவட்ட ஆணையம், எசச்ரிக்கை நிலை 2 இனைப் பிரகடணப்படுத்தி உள்ளது. வீதிகளிலும், வீதியோரங்களிலும், பனிச்சறுக்கல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிஸ் மாநகரசபையும் மாவட்ட ஆணையமும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஆனால் தேவையற்றவகையில் பரிசிற்குள் நடமாடுவது, மேலும் நிலைமையயை மோசமாக்கும் எனவும், பரிஸ் மாவட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
 
Pas-de-Calais, Somme, Nord, Aine, Oise, Seine-et-Marne, Val-d'Oise, Paris, Yvelines, Essonne, Seine-Saint-Denis, Val-de-Marne, Hauts-de-Seine ஆகிய மாவட்டங்களிற்குத் தொடர்ந்தும் பனிவீழச்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

No comments

Powered by Blogger.