இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு மூவரடங்கிய குழு அமைச்சர் டக்ளஸ் நியமிப்பு
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உயரதிகாரிகளைக் கொண்ட சிரேஸ்ட குழு கடற்றொழில் அமைச்சு திணைக்களங்களின் அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடலோர காவற் படை ஆகியவற்றுடன் கலந்துரையாடி இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான பரந்துரைகளை கடற்றொழில் அமைச்சருக்கு வழங்கவுள்ளது.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செய்ற்பபாடுகளினால் இலங்கை கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொள்வதுடன் இலங்கையின் கடல் வளமும் அழிவடைந்து வருகின்றது.
இதனால், குறித்த சட்ட விரோதச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற் படையினரால் மேற்கொள்ளபப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்பட்ட துரதிஸ்ட சம்பவத்தின் காரணமாக நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான சூழலில், குறித்த எல்லை தாண்டிய செயற்பாடுகளை நிரந்தரமாக நிறுத்துவதனை நோக்கமாகக் கொண்டு குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments