Header Ads

வைத்தியசாலைகள் பெரும் நெருக்கடி - சுகாதார அமைச்சர்!!



 பிரான்சில் கொரோனாத் தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகரித்தே செல்கின்றது. ஊரடங்கானது ஓரளவு கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தியிருந்தாலும், கொரோனாத் தொற்றானது அதிகரித்தே செல்கின்றது 

«கொரோனாப் பெருந்தொற்றுக்குள் இன்னுமொரு பெருந்தொற்றைத் தவிர்க்க மிகவும் இறுக்கமான முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்» 
 
«ஒவ்வொருநாளும் சராசரியாக 20.000 புதிய தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இதில் ஒவ்வொருநாளும் 2.000 பிரித்தானிய வைரசின் தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் 250 கொரோனாத் தொற்று நோயாளிகள் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்» 
 
«வைத்தியசாலைகள் பெரும் நெருக்கடிக்குள் உள்ளாகி உள்ளனர். பல வைத்தியசாலைகளில் இருந்து வேறு வைத்தியசாலைகளிற்கு நோயாளிகள் மாற்றப்படுகின்றனர். இது ஆபத்தின் நெருக்கடியாக உள்ளது» 
 
என இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.