Header Ads

ஜெர்மனி விமான நிலையத்தில் பெட்டியுடன் சிக்கிய மர்ம நபரால் பரபரப்பு

 


ஜெர்மனியின் பிராங்க்பிரட் நகரில் சர்வதேச விமான நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயங்குவதால் எப்போதும் மிகவும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், அந்த விமான நிலையத்திற்கு மாலை 5.16 மணியளவில் பெட்டியுடன் ஒரு நபர் வந்துள்ளார்.

அவர் முகக்கவசம் அணியாததால் அவரை தடுத்து நிறுத்திய பொலிஸார் முகக்கவசம் அணியும் படி கூறியள்ளனர்.

அப்போது அந்த நபர் பொலிஸாரை நோக்கி, ‘நான் உன்னை கொன்று விடுவேன், அல்லாஹு அக்பர் என கூறிக்கொண்டு தனது கையில் வைத்திருந்த பெட்டியை விமான நிலையத்திலேயே வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பொலிஸார் துப்பாக்கி முனையில் அந்த நபரை சுற்றிவளைத்ததுடன், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பெட்டியில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

இந்த பரபரப்பு சம்பவங்களால் பிராங்க்பிரட் விமானநிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் அனைத்து விமான போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது.

அத்துடன் விமானநிலையம் மூடப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்ட அந்த நபரை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் பிராங்க்பிரட் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ள

No comments

Powered by Blogger.