லண்டனில் வீட்டினுள் எரிவாயு கசிவினால் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
லண்டனிலுள்ள Somali Road என்ற பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து பயங்கரமாக எரிவாயு கசியும் வாசனை வந்துள்ளது.
அதனால் அந்த தெருவிலுள்ளவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிசார் அந்த வீட்டுக்குள் நுழைய முயற்சிக்க, வீட்டுக்குள் இருந்தவர்கள் வீட்டை உட்புறமாக பூட்டிவிட்டு பின்பக்க வழியாக தப்பியோடிவிட்டிருக்கிறார்கள்.
கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த பொலிசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும், சக்தி வாய்ந்த புற ஊதாக்கதிர் விளக்குகளின் வெப்பத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்திருக்கின்றன.
அந்த வீட்டுக்கு சட்ட விரோதமாக மின்சாரத்தைத் திருடியிருந்ததால், ஒரு ஜங்க்ஷன் பாக்சில் தீப்பிடித்து, அதனால் எரிவாயுக் குழாய் ஒன்று சேதமடைந்திருக்கிறது.
அதனால் பெரும் வெடி விபத்து ஒன்று ஏற்படவும் வாய்ப்பிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக எரிவாயு மற்றும் மின் இணைப்பை துண்டித்த பொலிசார், அந்த தெரு முழுவதையும் சீல் செய்ததுடன், ஹெலிகொப்டர் ஒன்றின் உதவியுடன் அந்த வீட்டிலிருந்து தப்பியவர்களை தேடும் பணியை ஈடுப்பட்டுள்ளனர்.
No comments