Header Ads

75 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொரோனா தடுபபு ஊசி - எவ்வாறு பதிவு செய்வது?



 எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதியிலிருந்து, 75 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனாத் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.

75 மேற்பட்டவர்கள், அல்லது எந்த வயதினராயினும் கடுமையான தொடர் நோய் உள்ளவர்கள் (vulnérabilité maladie chronique) (தீவிர  சிறுநீரகக் குறைபாடு, மாற்று உறுப்புப் பொறுத்தப்படடவர்கள், புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவர்கள், இருதய நோயாளிகள், மரபணு நோய்உள்ளவர்கள்.....) கொரோனாத் தடுப்பு ஊசிகளைத் திங்கட்கிழமை முதல் போட்டுக் கொள்ள முடியும்.

இதற்கு உங்களின் மருத்துவரைக் கலந்தாலோசிப்பதன் மூலமும் உறுதி செய்து கொள்ள முடியும்.

இதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, உங்களிற்கான நேரமும் (Rdv) ஊசி போடப்படும் இடமும் வழங்கப்பட்ட பின்னரே இதனைச் செய்ய முடியும்.

 

இணைய வழி மூலமாக  www.sante.fr  தளத்தில் பதிவு செய்வதன்  மூலமும்

தொலைபேசி மூலமாக 0800 009 110 என்ற இலகத்திற்கு அழைப்பதன் மூலமும்

 

நீங்கள் பதிவு செய்ய முடியும். இதற்கு உங்களின் அடையாள அட்டை மற்றும் carte vitale அவசியமானது.

 

No comments

Powered by Blogger.