Header Ads

18h00 மணி ஊரடங்கு - பாடசாலை - விளையாட்டு விபரங்கள்!!

 


18h00 மணியிலிருந்தான ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், பாடசாலைகள், கெலேஜ் மற்றும் லிசேக்கள் தொடர்ந்து இயங்கும் எனக் தேசியக் கல்வி, இளையோர் மற்றும் விளையாட்டு அமைச்சரான ஜோன் மிசேல் புளேங்கே தெரிவித்துள்ளார்.

 
பாடசாலைகளிலும் கொரோனத் தொற்றின் வீதம் அதிகரித்த நிலையிலும், கல்வியின் அவசியத்தால் தொடர்ச்சியான பாடசாலைகள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட உள்ளிருப்பின் பின்னர் பல மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தி உள்ளதாகவும் அதனாலேயெ பாடசாலைகள் அவசியம் எனவும் அமைச்சர் விளக்கி உள்ளார்.
 
லிசேக்கள் தொடர்ந்தும் பாதிக் குழுக்களாக, ஒவ்வொரு மாணவர்களும் இரண்டு நாளிற்கொரு முறையும், மற்றைய நாளில் இலத்திரனியல் இணையக் கல்வியும் நடக்கும் (mode Hybride) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே நிலை கொலேஜ்களிற்கும் பொருந்தும் என்றும், ஒவ்வொரு கொலேஜ்களும் தங்கள் முடிவை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாடசாலைகளிலும், தனியார் மற்றும் விளையாட்டுக் கழகங்களிலும், உள்ளக விளையாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
 
பாடசாலை உணவுச் சாலைகளிற்கும், மாற்றுத் திட்டம் சிந்திக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
பல்கலைக்கழகங்களில், முதலாம் ஆண்டு மாணவர்களிற்கு பாதிப் பாதிக் குழுக்களாக எதிர்வரும் 25ம் திகதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதே நேரம் பாடசாலைகள், கெலேஜ் மற்றும் லிசேக்களில், வாரம் 300.000 வரையும் மாதாந்தம் ஒரு மில்லியன் பேரிற்கும் கொரொனாப் பரிசோதனை நடைபெறும் என்றும், மூன்றிற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அறியப்பட்டால்  அங்கு உடனடியாக கொரோனத் தொற்றுப் பரிசோதனை செய்யப்படும் எனவும், தொற்று அதிகரித்தால் குறித்த பாடசாலை மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிலைமை மேலும் மோசமடையும் வரை பாடசாலைகள் இயங்கும் எனவும் கல்வியமைச்சர் உறுதியளித்துள்ளார
 

No comments

Powered by Blogger.